தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஒத்த செருப்பு ரீமேக் - அபிஷேக் பச்சனுக்கு பார்த்திபன் புகழாரம் - ஒத்த செருப்பு

சென்னை: ஒத்த செருப்பு திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்திருக்கும் அபிஷேக் பச்சனை இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் பாராட்டியுள்ளார்.

பார்த்திபன்
பார்த்திபன்

By

Published : Aug 31, 2021, 1:23 PM IST

'கோடிட்ட இடத்தை நிரப்புக' படத்திற்குப் பிறகு பார்த்திபன் இயக்கி, நடித்த 'ஒத்த செருப்பு' திரைப்படம், 2019ஆம் ஆண்டு வெளியானது.

இந்தப் படத்தில் பார்த்திபன் ஒற்றை ஆளாக நடித்து புதிய முயற்சியை மேற்கொண்டார். இந்தப் படம் உலக அளவில் வெளியான சோலோ கேரக்டர் படங்களில் 13ஆவது படமாகும்.

இந்நிலையில், ஒத்த செருப்பு திரைப்படம் இயக்குநர் பார்த்திபனால் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. நடிகர் அபிஷேக் பச்சன் நாயகனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 12ஆம் தேதி சென்னையில் தொடங்கியது.

இப்படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்துவிட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த அவர், அபிஷேக் பச்சன் நடிப்பையும் புகழ்ந்துள்ளார்.

அதில், “ 6.3 உயரத்தில் ஒரு சிறுவன். இன்னும் உயரிய அப்பாவுக்குக் குழந்தை. உலகப் புகழுக்கு மகனாகவும்,
உலக அழகிக்கு கணவனாகவும், தானிருக்கும் அனுபவத்தை தானியங்கி இயந்திரமாய் தட்டிவிட்டாரென்றால் ரசிக்கலாம்-மணிகணக்கில்! முதலில் இப்படி ஒரு படத்தை தேர்வு செய்ததும், தானே தயாரிப்பதும்,ரசனை!

பார்த்திபன் ட்வீட்

பெருமையின்றி அலர்ட்டா இருப்பதும், அலட்டாமல் இருப்பதும் அடுத்த லெவலில் தன் நடிப்பு இருக்க மெனக்கெடுவதும் ரசிக்கிறேன் >mr.ABISHEK BACHAN!!! பாதிப்படம் கடந்துவிட்டேன். எனக்கே முதல் ஹிந்தி>என்னுடன் ராம்ஜி (cinematography) சத்யா(music) சுதர்சன் (editor) என்று தமிழ் அள்ளிப் போகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details