மணிரத்னம் இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் 'செக்கச் சிவந்த வானம்'. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கல்கி எழுதிய வரலாற்றுப் புனைவுக் கதையான 'பொன்னியின் செல்வன்' கதையை இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
இப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராவிட்டாலும், அவ்வப்போது படத்தைப் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி மணிரத்னம் ரசிகர்களையும் 'பொன்னியின் செல்வன்' ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்திவருகிறது. இதுவரை விக்ரம், மோகன்பாபு, கார்த்தி, அமலா பால், அனுஷ்கா ஆகியோர் நடிக்கவுள்ளனர்.