சென்னையில் உள்ள பிரபல மருத்துவனையில் சிகிச்சைப் பெற்றுவந்த எஸ்.பி.பி. நேற்று (செப். 25) சிசிச்சைப் பலனின்றி இயற்கை எய்தினார். அவரின் மறைவு குறித்து திரைத் துறையினர், ரசிகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என்று பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
மேலும் நேற்று (செப். 25) முதல் சமூக வலைதளங்களில் திரைத்துறையினர் பலரும் எஸ்.பி.பி.யுடன் தாங்களுக்கு நடந்த நிகழ்வு குறித்து பதிவு செய்துவருகின்றனர்.
அந்தவகையில் நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உருவம் தவிர்த்து உணரத் தொடங்கு
அது கடவுளோ..காதலோ!
இது கிறுக்கல்களில் நான் எழுதியது.
இனி இதில் எஸ்.பி.பி.க்காக என்றும் சேர்த்துக் கொண்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், ”மண்ணுக்குள் புதையுமோ பால் நிலா-பாடும் நிலா?” என்று பதிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க:பாடும் நிலா விண்ணில் இருந்து பாடட்டும் - நயன்தாரா உருக்கம்!