நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படங்களில், சொல்லி அடிக்கும் கில்லியான இயக்குநர் S. எழில், முதல் முறையாக தன் பாணியிலிருந்து மாறுபட்டு முழுக்க முழுக்க ஒரு மர்மம் நிறைந்த த்ரில்லர் படத்தை இயக்கியுள்ளார்.
இதனை ராதாகிருஷ்ணன் பார்த்திபன், கௌதம் கார்த்திக் நடிப்பில் இயக்கிவருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, தமிழின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய்சேதுபதி, ரசிகர்களின் பார்வைக்காக வெளியிட்டுள்ளார்.
த்ரில்லர் திரைப்படம்
இப்படம் குறித்து இயக்குநர் எழில் கூறுகையில், “‘யுத்த சத்தம்’ என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படைப்பாகும். முதல் காரணம் இது என் வழக்கமான திரைப்பட பாணியிலிருந்து மாறுபட்டு, மிகவும் நேர்த்திகரமாக உருவாகும் படைப்பு.
நான் இதுவரையிலும் மென் உணர்வுகளை கூறும் நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படங்களையே செய்து வந்துள்ளேன். ஆனால் இப்படம் மர்மம் நிறைந்த, பரபரப்பான த்ரில்லர் திரைப்படம் ஆகும்.
"யுத்த சத்தம்" தலைப்பு படத்தின் கதை உருவான ராஜேஷ்குமார் அவர்களின் நாவலின் அதே தலைப்பாகும். இப்படம் அவரது கதையிலிருந்து வேறுபடாமல் சிறப்பாக வந்திருப்பதாக என்னை பாராட்டவும் செய்தார். நான் உதவி இயக்குநராக, நடிகர் பார்த்திபன் அவர்களுடன் பணிபுரிந்துள்ளேன். அவரை திரையில் இயக்குவது மகிழ்ச்சியாக உள்ளது.