நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம், ’ஏ1’. இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத்தொடர்ந்து அவர் மீண்டும் இயக்குநர் ஜான்சனுடன் கூட்டணி அமைத்துள்ளர்.
‘பாரீஸ் ஜெயராஜ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் இளஞ்சிவப்பு நிறத்தில், கண்ணாடி அணிந்து மிகவும் மாஸாக சந்தானம் போஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.