பா. ரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் பரியேறும் பெருமாள். இதில் கதிர், ஆனந்தி முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
கோனார் தமிழ் உரையில் 'பரியேறும் பெருமாள்'! - பரியேறும் பெருமாள்
'பரியேறும் பெருமாள் படத்தில் எண்சுவைகளும் சிறப்புற பதிவாகியுள்ளன' என்று அச்சிட்டு கோனார் தமிழ்உரை அப்படத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.

Pariyerum perumal
இப்படம் சமுகத்தின் ஏற்றத் தாழ்வுகளையும், தமிழ் வழியில் கல்வி கற்ற ஒருவன் கல்லூரிக்குள் நுழையும்போது அவன் படும் இன்னல்களையும் துல்லியமாக பிரதிபலித்தது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் பல விருதுகளை வாங்கிக் குவித்தது.