தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பிரான்ஸ் திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாளுக்கு 3 விருதுகள்

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படம், பிரான்ஸ் திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை வாங்கியுள்ளது.

பிரான்ஸ் திரைப்பட விழாவில் பரியனுக்கு 3 விருதுகள்

By

Published : Apr 15, 2019, 3:16 PM IST

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் 'பரியேறும் பெருமாள்'. இதில் கதிர், ஆனந்தி, யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். திருநெல்வேலி சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞன் தன் வாழ்வில் சந்திக்கும் சாதிய ஒடுக்குமுறைகளை பற்றிய சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. சந்தோஷ் நாராயணன் இசையில் கருப்பி, எங்கும் புகழ் துவங்க, நான் யார்..?, வா ரயில் விட போலாமா.. என கதையை பிரதிபலித்த அனைத்து பாடல்களும் ஹிட்டாகின.

பரியேறும் பெருமாள்

மக்களின் மனங்களில் புரையோடி போயிருக்கிற சாதிய வன்மத்தை, ஒரு டீ குடித்துக் கொண்டே விவாதித்து சரி செய்து கொண்டு மானுட விடுதலையை மீட்டெடுக்கலாம் என்று அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் படம் பேசியிருந்தது. உண்மையாகவும், நேர்மையாகவும் பேசியதால் பரியேறும் பெருமாளை மக்கள் கொண்டாடினர். அனைத்து ஊடகங்களும் பாராட்டி எழுதின. இதுபோன்ற படங்களும் அதிகம் வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தன.

சிறந்த படத்தை கொடுத்த மாரி செல்வராஜை, தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பாராட்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள், மாரி செல்வராஜை அழைத்து பாராட்டு விழா நடத்தி வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் பரியேறும் பெருமாள் படம் திரையிட்ட இடமெல்லாம் விருதுகளை குவிக்கத் தொடங்கியது.16வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள் சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்டது.

கோவா திரைப்பட விழாவில் விருது

மேலும், 10வது சர்வதேச நார்வே தமிழ் திரைப்பட விழா, கோவா திரைப்பட விழாவிலும் விருதுகளை குவித்தது. மேலும், மராட்டிய கவிஞரும், மூத்த சமூக செயற்பாட்டாளருமான பத்மஸ்ரீ நாம்தியோ தசால் பெயரால் மும்பையில் ஆண்டுதோறும் கலைத்துறையில் மிக சிறந்த பங்களிப்புக்காக வழங்கப்படும் ’சமஸ்தி 2019’ விருதை 'பரியேறும் பெருமாள்' படத்திற்கு வழங்கப்பட்டது. இந்த விருதை பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வழங்க மாரி செல்வராஜ் பெற்றுக் கொண்டார்.

பிரான்ஸ் திரைப்பட விழாவில் பரியனுக்கு 3 விருதுகள்

இந்த விருது வரிசையில், பிரான்ஸ் திரைப்பட விழாவிலும் பரியேறும் பெருமாள் திரைப்படம், Independent Award of criticism with film critics circle of India, Special mention of the jury, Audience Award ஆகிய மூன்று விருதுகளை பெற்றதோடு பார்வையாளர்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. உலகெங்கிலும் மக்களின் வரவேற்பைபும் திரைப்பட விழாக்களில் விருதுப் பட்டியல்களையும் அலங்கரித்து வருகிறான் பரியேறும் பெருமாள்.

பாரீஸ் திரைப்பட விழாவில் பரியனுக்கு விருது

ABOUT THE AUTHOR

...view details