நாடெங்கும் கரோனா நோய்த்தொற்றின் அச்சுறுத்தல் அதிகரித்துவரும் நிலையில், அமலில் உள்ள ஊரடங்கு தளர்வுபடுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் நடமாட்டம் அதிகரித்துவருகிறது. இதனால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளது.
'கொஞ்சம் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுங்கள்'- பரினீத்தி சோப்ரா - கொஞ்சம் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுங்கள் கோரிக்கை விடுத்த பரினீத்தி
ஊரடங்கு நேரத்தில் வேறு வழியில்லாமல் வெளியே செல்பவர்கள் மற்றவர்களின் நிலையை அறிந்து பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளுமாறு நடிகை பரினீத்தி சோப்ரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாலிவுட் நடிகையான பரினீத்தி சோப்ரா இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'பலர் வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் வெளியே செல்கின்றனர். அவர்களுக்கு வேறு வழியும் இல்லை. ஒருவேளை உங்களுக்கு வாய்ப்பு இருந்தால் வீட்டில் இருங்கள், அவர்களுக்காகவும் உங்களுக்காகவும். அப்படி வெளியே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டால் பொறுப்பாக இருங்கள். மக்களை சந்தித்தால் பொறுப்பாக நடந்துகொள்ளுங்கள்.
நீங்கள் தனியாக இருக்கலாம் ஆனால் அவர்கள் தனியாக இல்லை. அந்த நபர் யாரை சந்தித்துவிட்டு வந்திருக்கிறார் அல்லது யாரை சந்திக்க உள்ளார் என்பதை சிந்தித்து பாருங்கள். அவர்கள் வீட்டில் வயதானவர்களோ, அல்லது வேறு ஏதேனும் உடல் உபாதை உள்ளவர்களோ இருக்கலாம். எல்லாருக்கும் அதுபோன்ற நிலை உள்ளது என்பதை நினைவில் வைத்து நடந்துகொள்ளுங்கள்' என்று தெரிவித்திருந்தார்.