போங் ஜோன் ஹோவின் ஆஸ்கர் வென்ற திரைப்படமான ‘பாராசைட்’, சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த படம் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் ஆசிய திரைப்பட விருது விழாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆசிய திரைப்பட விருதுகளில் அதிகம் பரிந்துரைக்கப்பட்ட ’பாராசைட்’ - parasite nominations at asian film awards
இந்த படத்துடன் வாங் சியோசுவாயின் சோ லாங், மை சன் மற்றும் சங் மோங் ஹாங் இயக்கிய ஏ சன் உள்ளிட்ட படங்கள் 7 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 11 நாடுகளில் இருந்து 39 திரைப்படங்கள் இதில் திரையிடப்படவுள்ளன.

இந்த படத்துடன் வாங் சியோசுவாயின் சோ லாங், மை சன் மற்றும் சங் மோங் ஹாங் இயக்கிய ஏ சன் உள்ளிட்ட படங்கள் 7 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 11 நாடுகளில் இருந்து 39 திரைப்படங்கள் இதில் திரையிடப்படவுள்ளன. கரோனா பரவல் காரணமாக இந்நிகழ்ச்சி காணொலி வாயிலாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 14ஆம் தேதி ஆசிய திரைப்பட விருதுகளின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இது ஒளிபரப்பாகும்.
92ஆவது அகாதமி விருதுகள் விழாவில் 4 விருதுகளை வென்ற ‘பாராசைட்’, இன்னும் பல விழாக்களில் விருதுகளை வாரிக்குவித்து வருகிறது. இந்த படத்தில் காங் ஹோ, லீ சன் க்யூன், சோ இயோ சியாங், சோய் வோ சிக் மற்றும் பார்க் சோ டேம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.