சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக, சீனாவில் மட்டும் 2 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மற்ற நாடுகளிலும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால், அச்சம் தொற்றியுள்ளது.
சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக, சீனாவில் மட்டும் 2 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மற்ற நாடுகளிலும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால், அச்சம் தொற்றியுள்ளது.
இதனையடுத்து இத்தாலியில் டாம் குரூஸ் நடிப்பில் உருவாகிவரும் 'மிஷன்: இம்பாசிபிள் 7' படத்தின் படிப்பை மூன்று வாரம் நிறுத்தியுள்ளனர். இது குறித்து பாராமவுண்ட் பிக்சர்ஸ் வெளியிட்ட அறிக்கையில், ”கொரோனா காரணமாக பொதுகூட்டங்களுக்கு தடை விதிக்க அரசாங்கம் தவறிவிட்டது. ஆனால் நாங்கள் எங்கள் நடிகர்கள், படக்குழுவினர் பாதுகாப்பு, நல்வாழ்வுக்காக ஏராளமான முன்னெச்சரிக்கையை மேற்கொண்டு வருகிறோம். 'மிஷன்: இம்பாசிபிள் 7' படத்தின் படப்பிடிப்பை மூன்று வாரம் வென்னிஸில் நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது படப்பிடிப்பை ரத்து செய்துள்ளோம். இந்த நாட்களில் எங்கள் படப்பிடிப்பின் திட்டத்தை மாற்றியமைக்க உள்ளோம்.
அதுமட்டுமல்லாது படப்பிடிப்பு தொடங்கும் வரை படக்குழுவினர் தங்களது வீட்டிற்கு செல்ல அனுமதிக்கிறோம். கொரோனா பாதிப்பை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மேலும் சுகாதாரத்துறையினருடன் பணியாற்றவும் நாங்கள் தயாராக உள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இயக்குநர் கிறிஸ்டோபர் மெக்குவாரி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் டாம் குரூஸ் ஈதன் ஹன்ட் என்னும் கதாபாத்திரத்தில் அழிக்க முடியாத சீக்ரெட் ஏஜென்டாக நடித்து வருகிறார். 'மிஷன்: இம்பாசிபிள் 7' படத்தை 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் தேதியும் 'மிஷன்: இம்பாசிபிள் 8' படத்தை 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதியும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.