தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வைரலாகும் ஷ்ரதா கபூரின் வாட்ஸ் அப் மெசேஜ் - ஷ்ரதா கபூர் படங்கள்

நடிகை ஷ்ரதா கபூரின் வாட்ஸ் அப் மெசேஜை அடையாளம் தெரியாத நபர் சிலர் புகைப்படமாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர்.

ஷ்ரதா
ஷ்ரதா

By

Published : Jul 31, 2021, 10:18 PM IST

நடிகர், நடிகைகள் வெளியே செல்லும் போது அவரது ரசிகர்கள் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்தவகையில் நடிகை ஷ்ரதா கபூர் சமீபத்தில் மும்பை விமான நிலையத்திற்குச் சென்றிருந்தார். அப்போது அவரை ரசிகர்கள் பட்டாளம் சூழ்ந்து கொண்டது.

அதேசமயம் அவர் தனது தொலைபேசியில் வெட்கம் கலந்த சிரிப்புடன் மெசேஜ் செய்து கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர் வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்வதை புகைப்படமாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

இதனைக் கண்ட நெட்டிசன்கள் அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் மற்ற யாரும் நுழையக் கூடாது என விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:மூன்று படங்கள்; 1,000 கோடி ரூபாய் பட்ஜெட் - வசூல் சாதனை படைப்பாரா பிரபாஸ்

ABOUT THE AUTHOR

...view details