பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்தவர், கவிதா கவுடா. தற்போது இந்தக் கதாபாத்திரத்தில் அவருக்குப் பதிலாக ஹேமா ராஜ்குமார் நடித்து வருகிறார். நடிகை கவிதா கவுடா விஜய் டிவியில் ஒளிபரப்பான 'மகாபாரதம்' சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 'மீனா'வுக்கு கெட்டி மேளம் - serial actress Kavita Gowda marriage
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்த கவிதா கவுடா, பெற்றோரின் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார்.
![பாண்டியன் ஸ்டோர்ஸ் 'மீனா'வுக்கு கெட்டி மேளம் Pandian Stores serial actress kavitha gowda married](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11795859-thumbnail-3x2-aa.jpg)
தொடர்ந்து பாண்டின் ஸ்டோர்ஸில் நடித்த அவர் கன்னடத்தில் ஒளிபரப்பாகிய 'பிக் பாஸ்' சீசன் 6இல் வாய்ப்பு கிடைத்ததால் தொடரில் இருந்து வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியன் மூலம் இவர் மேலும் பிரபலமடைந்தார். இதையடுத்து அவர் கன்னட மொழியில் வெளியான 'லட்சுமி பிரம்மா' எனும் சீரியலில் நடித்தார். அதே சீரியலில் நடித்த சந்தன்குமார் என்பவருக்கும் இவருக்குமிடையே நட்பு உருவானது. நாளடைவில் நட்பு காதலாக இருவரும் தங்களின் காதலை பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
இருவீட்டாரின் சம்மதத்துடன் ஏப்ரல் 1ஆம் தேதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை (மே 14) அன்று இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. கரோனா அச்சம் காரணமாக பெரிய அளவில் ஆடம்பரம் இல்லாமல் சிம்பிளாக இவர்களின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமண புகைப்படங்களை நடிகை கவிதா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.