ஆனந்தம் திரைப்படம் போல அண்ணன், தம்பி உறவுகளை மையமாக கொண்டு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாடகம் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
ஸ்டாலின், சுஜிதா ஆகியோர் இதில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் கண்ணன், ஐஸ்வர்யா ஆகிய கதாபாத்திரங்கள் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டன. நாடகம் முக்கிய கட்டத்தை அடைந்துள்ள இந்த வேளையில், ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்தவர் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக விஜய் டிவி நடிகை ஒருவரை தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது.