தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல், வரும் 23 ஆம் தேதி நடைப்பெற உள்ளது. இதனையடுத்து விஷால் தலைமையிலான பண்டவர் அணியினர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
'ஓட்டுக்காக பாண்டவர் அணி யாருக்கும் பணம் தராது' - நடிகர் நாசர் - நாசர்
சென்னை: "சங்கத்துக்காக செய்த பணிகள், திட்டங்களை கொண்டு வரும் தேர்தலை சந்திக்க உள்ளோம். ஓட்டுக்காக யாருக்கும் பாண்டவர் அணி பணம் தராது" என்று, நடிகர் நாசர் தெரிவித்தார்.
தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசர், செய்தியாளர்களிடம் கூறுகையில், "தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நானும், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி மற்றும் துணை தலைவர்கள் பதவிக்கு பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளோம். கடந்த 3 ஆண்டுகளில் சங்கத்துக்காக செய்த திட்டங்கள் கொண்டு இந்த தேர்தலை சந்திக்க உள்ளோம்.
நடிகர் சங்க கட்டிட பணியே எங்களின் பணியை காட்டுகிறது. நடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு இல்லை. இந்த தேர்தலில் பாண்டவர் அணியின் தரப்பில் இருந்து யாருக்கும் பணம் கொடுக்க மாட்டோம். நடிகர் சங்க தேர்தல் குறித்து நடிகர் ராதவி கூறிய கருத்தானது சீனியர் நடிகர் என்கிற முறையில் தெரிவித்துள்ளார். எனவே அவர் கூறிய குற்றச்சாட்டு குறித்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.