’புலிக்குட்டி பாண்டி’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் பிரபு ‘பகையே காத்திரு’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட் நடிக்கிறார். இவர்களுடன் சதீஷ், சாய் குமார், வரலட்சுமி சரத்குமார், வித்யா பிரதீப் உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்கின்றனர்.
மணிவேல் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (ஏப்ரல் 16) சென்னையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. மேலும் கொச்சின், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.