ஒரே தலைப்பின் கீழ் பல்வேறு இயக்குநர்கள் இணைந்து ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்குவது தற்போது உள்ள காலகட்டத்தில் ட்ரெண்டாகிவிட்டது. அந்தவகையில் ராஜீவ் மேனன், கெளதம் மேனன், சுஹாசினி மணிரத்தினம், கார்த்திக் சுப்புராஜ், சுதா கொங்கரா ஆகியோர் இயக்கியுள்ள படம் 'புத்தம் புது காலை'. இத்திரைப்படம் வரும் அக்டோபர் 16ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதைத்தொடர்ந்து நெட்ஃப்ளிக்ஸ் தளம் தற்போது முதல்முறையாக தமிழ் படத்தை தயாரித்துள்ளது. கெளதம் மேனன், வெற்றிமாறன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளனர்.
ஆந்தாலஜி பாணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு 'பாவக் கதைகள்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. காதல், கெளரவம், அந்தஸ்து, உள்ளிட்டவற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள இத்திரைப்படத்தை ப்ளையிங் யூனிகார் என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் மற்றும் ஆர்.எஸ்.வி.பி மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
இதில் பவானி ஶ்ரீ, அஞ்சலி, ஹரி, சாந்தனு, காளிதாஸ், ஜெயராம், பிரகாஷ் ராஜ், சிம்ரன், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விரைவில் இத்திரைப்படம் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:பாலியல் வழக்கு - விசாரணைக்காக நேரில் ஆஜரான அனுராக் காஷ்யப்!