1975 ஆகஸ்ட் 18ஆம் தேதி ரஜினியின் முதல் படமான ‘அபூர்வ ராகங்கள்’ வெளியானது. வருகிற 18ஆம் தேதியுடன் ரஜினி திரைத்துறைக்கு வந்து 45 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை கொண்டாடும் வகையில் 45YearsOfRajinism என்கிற ஹேஷ்டேக்கில் காமன் டிபி உருவாக்கப்பட்டுள்ளது. அதை இயக்குநர் பா. ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
#45YearsOfRajinism - புகைப்படத்தை வெளியிட்ட பா. ரஞ்சித் - தலைவர்
ரஜினி திரைத்துறைக்கு வந்து 45 ஆண்டுகள் நிறைவடையவுள்ளது, அதற்கான காமன் டிபியை பா. ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
![#45YearsOfRajinism - புகைப்படத்தை வெளியிட்ட பா. ரஞ்சித் 45 years of rajinism](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8355967-639-8355967-1596974170795.jpg)
45 years of rajinism
இதுகுறித்து பா. ரஞ்சித், 45 ஆண்டுகள், தமிழ் சினிமா மற்றும் இந்திய சினிமாவின் தனித்துவமான முகம் சூப்பர் ஸ்டார் ரஜினி. அவரது காமன் டிபியை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார்.