தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

’விவேக்கின் மறைவு கவலை அளிக்கிறது’- இயக்குநர் பா.ரஞ்சித் - விவேக் மறைவு

சென்னை: நடிகர் விவேக்கின் மரண செய்தி பெரும் கவலை அளிக்கிறது என இயக்குநர் பா.ரஞ்சித் ட்விட் செய்துள்ளார்.

விவேக்
விவேக்

By

Published : Apr 17, 2021, 12:58 PM IST

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வந்த விவேக், நேற்று (ஏப்ரல்.16) காலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி இன்று (ஏப்ரல்.17) அதிகாலை உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அவரின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பா.ரஞ்சித் வெளியிட்ட பதிவு

இந்நிலையில் சின்னக் கலைவாணர் விவேக் மரணம் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “சிறந்த நகைச்சுவை கலைஞர் நடிகர் விவேக்கின் மரணச் செய்தி பெரும் கவலை அளிக்கிறது. அவரின் பிரிவில் வாடும் திரை உலகிற்கும், ரசிகர்களுக்கும், குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:’எங்கள் நினைவில் வாழ்வீர்கள் விவேக் சார்’- சூர்யா

ABOUT THE AUTHOR

...view details