'மாநகரம்' இயக்குநர் லோக்கேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான திரைப்படம் 'கைதி'. கடந்த மாதம் தீபாவளிக்கு முன்பு வெளியான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. பல தரப்பினரும் இத்திரைப்படத்தினை பாராட்டிய நிலையில் பிரபல இயக்குநர் பா. ரஞ்சித்தும் இப்படம் குறித்த தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
'கைதி'க்கு வாழ்த்து தெரிவித்த 'மெட்ராஸ்' இயக்குநர் - கைதி படத்தை புகழ்ந்த பா. ரஞ்சித்
'கைதி' திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர் கார்த்தி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், உள்ளிட்ட படக்குழுவினருக்கு இயக்குநர் பா. ரஞ்சித் வாழ்த்து தெரிவித்துள்ளார் .
Pa ranjith appreciates kaithi movie
அந்தப் பதிவில் அவர், சுவாரஸ்யமான எழுத்திற்காகவும், திரையாக்கத்திற்காகவும், இயக்குநர் லோக்கேஷ் கனகராஜையும், நடிப்பிற்காக நடிகர் கார்த்தியையும் பாராட்டி, ஒளிப்பதிவாளர், துணை கதாப்பாத்திரங்கள், இசை, தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளர் ஆகியோருக்கு வாழ்த்துகள் என பதிவிட்டிருந்தார்.
இதையும் படிங்க: ’ஆக்ஷன்’ ஹீரோவின் அழகான ரொமான்டிக் காட்சிகள்!