நடிகர் ஆர்யா நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள, 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் வரும் 22ஆம் தேதி அமேசான் ஃபிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
'சார்பட்டா பரம்பரை' வெளியாக ஒருசில நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தை விளம்பரம் செய்யும் பணியில் படக்குழு மும்மரமாக இறங்கியுள்ளது.
அந்தவகையில் இயக்குநர் பா.ரஞ்சித் 'சார்பட்டா பரம்பரை 'படம் தொடர்பாக சமீபத்தில் கொடுத்த பேட்டியில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் தனது அடுத்த படத்தின் தலைப்பு, 'நட்சத்திரம் நகர்கிறது' என வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் புதுமுகங்களை மட்டுமே நடிக்க வைக்க இயக்குநர் பா.ரஞ்சித் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 'அட்ட கத்தி' படத்திற்குப் பிறகு இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கவுள்ள காதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஓடிடியில் நேரடியாக வெளியாகும் அஜித் பட இயக்குநரின் புதிய படம்!