’பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை உருவாக்கியவர் நடிகை ஓவியா. எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஓவியா, அவ்வப்போது தனது ரசிகர்களுடன் உரையாடி வருகிறார்.
இந்நிலையில், நடிகை ஓவியா ஆர்மியின் அட்மினும், அவரின் ரசிகருமான சன்வி சமீபத்தில் உயிரிழந்துள்ளார். அவரின் மிக பெரிய ஆசையே ஒருமுறையாவது ஓவியாவை நேரில் சந்தித்துவிட வேண்டும் என்பதுதான், என்று ஓவியா ஆர்மி பக்கத்தில் இருந்து பதிவு ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.