தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

யோகிபாபுவுடன் ஜோடி சேர்கிறார் ஓவியா - சினிமா செய்திகள்

யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள படத்தில் யோகிபாபுவுக்கு ஜோடியாக ஓவியா நடிக்கவுள்ளார்.

ஓவியா
ஓவியா

By

Published : Sep 22, 2021, 6:02 PM IST

மலையாள நடிகை ஓவியா 2010ஆம் ஆண்டு களவாணி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனால் அடுத்தடுத்த படங்களில் அவர் நடிக்கத் தொடங்கினார்.அதன் பிறகு சிவகார்த்திகேயன் ஜோடியாக மெரினா, சிவாவுக்கு ஜோடியாக கலகலப்பு, விமலுக்கு ஜோடியாக களவாணி ஆகிய படங்களில் ஓவியா நடித்தார்.

ஓவியா

இதையடுத்து கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார் ஓவியா.

இந்நிலையில், யோகிபாபு அடுத்ததாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள படத்தை அன்கா மீடியா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்தப் படத்தில் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிகை ஓவியா நடிக்க உள்ளார்.

ஓவியா

இப்படத்தின் பூஜை வருகிற செப்டம்பர் 24ஆம் தேதி நடைபெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நடிகை ஓவியா, யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இதுதொடர்பான அறிவிப்பை நடிகை ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஓவியாவின் அடுத்த படம்

இதையும் படிங்க : ஆசையாக வாங்கிய கார் - நிலைக்காத சந்தோஷம்

ABOUT THE AUTHOR

...view details