தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வங்கி கடன் முகாமில் 'ஓவியா' - அலைமோதிய ரசிகர்கள் கூட்டம் - நடிகை ஓவியா

தனியார் நிறுவனம் நடத்திய வீடு கட்டுவதற்கான கடன் உதவி முகாமில் பிக்பாஸ் புகழ் நடிகை ஓவியா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

oviya

By

Published : Nov 23, 2019, 4:42 PM IST

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் தனியார் நிறுவனம் வீடு கட்டுவதற்கான கடன் உதவி முகாம் நடத்தியது. இதில் நடிகை ஓவியா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்த முகாமில் பல வீடுகள் விற்கும் நிறுவனங்களும், சில வங்கிகளின் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகை ஓவியா குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

பிக்பாஸ் புகழ் நடிகை ஓவியா

பின்னர் பேசிய நடிகை ஓவியா, இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்தமைக்கு நன்றிகளை தெரிவித்தார். அரசியலில் ரஜினி, கமல் இணைந்து செயல்படுவார்களா என்பது போன்ற செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், அதைப் பற்றி கூறுவதற்கு ஒன்றும் இல்லை என்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி கலந்துகொள்வதைப் பற்றி சிந்திக்கவில்லை, முடிந்தது முடிந்ததுதான் என்றும் கூறினார்.

இந்த முகாமில் பங்கேற்ற நடிகை ஓவியாவைக் காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. ரசிகர்கள் ஓவியாவுடன் புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர்.

இதையும் படிங்க...

சுசீந்திரனின் 'சாம்பியன்' - புது அப்டேட்

ABOUT THE AUTHOR

...view details