'களவாணி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஓவியா. இவர் திரைத்துறையில் பிரபலமடைந்து ரசிகர்களை உருவாக்கியதை விட பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று 'ஓவியா ஆர்மி' என்ற ஒன்றை உருவாக்கியவர்.
அனிதா உதீப் இயக்கத்தில்ஓவியா நடிப்பில் அண்மையில் வெளியான படம்'90 எம்.எல்' .இதில் இரட்டை அர்த்த வசனங்களுடன் மது அருந்தும் காட்சிகளில் ஓவியாநடித்ததால் பெரும் சர்ச்சையானது.
இந்நிலையில் ஓவியா பிருத்வி பாண்டியராஜனுக்கு ஜோடியாக 'கணேசா மீண்டும் சந்திப்போம்' என்ற படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை ரத்தீஷ் எரட் இயக்க அருண் விக்ரமன் கிருஷ்ணன் தயாரித்துள்ளார். இப்படத்திலும் ஓவியா மது அருந்தும் காட்சியில் நடித்துள்ளார்.
ஏற்கனவே இந்தப் படத்தின் பாடலான ‘வியா வியா ஓவியா, நீ கிளியோபட்ரா ஆவியா... நீ மனச திறக்கும் சாவியா’ பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதது.
'90 எம்.எல்' படத்துக்கு 'ஏ' சான்றிதழ் வழங்கிய தணிக்கைக் குழு 'கணேசா மீண்டும் சந்திப்போம்' படத்திற்கு 'யு'சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.