ஈழத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம், 'ஒற்றைப் பனைமரம்'. எஸ். தணிகைவேல் தயாரித்திருக்கும் இப்படம் 40 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 17 விருதுகளையும் குவித்திருக்கிறது.
இந்தப் படத்தை 'மண்' பட இயக்குநர் புதியவன் ராசையாவே இயக்கி நடித்துள்ளார். ஈழப்போர் முடிவுறும் இறுதி நாள்களில் ஆரம்பிக்கும் இக்கதை, சமகால சூழலில் போராளிகளும், மக்களும் சந்தித்துக் கொள்ளும்வரை நீள்கிறது. இதைப் படத்தின் இயக்குநர் சுவாரஸ்யமாகப் படமாக்கியுள்ளார்.