தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மூன்று விருதுகளைத் தட்டிச்சென்ற 'ஒத்த செருப்பு சைஸ் 7' - Parthiban latest movie

'ஒத்த செருப்பு சைஸ் 7' திரைப்படம் டொரண்டோ சர்வதேச விழாவில் மூன்று விருதுகளை வென்றுள்ளது.

பார்த்திபன்
பார்த்திபன்

By

Published : Sep 15, 2020, 7:49 PM IST

பார்த்திபன் தயாரித்து, இயக்கி நடித்த சோலோ ஆக்டிங் திரைப்படம் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’. கடந்த ஆண்டு வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றது.

இந்நிலையில் இத்திரைப்படம் 2020ஆம் ஆண்டு டொரண்டோ உலகத்தமிழ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, மூன்று விருதுகளை வென்றுள்ளது.

சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த தனி சோலோ நடிப்பு என மூன்று விருதுகள் இப்படத்திற்குக் கிடைத்துள்ளது.

இது குறித்து நடிகர் பார்த்திபன் கூறுகையில், “'ஒத்த செருப்பு சைஸ் 7' திரைப்படம் கடந்த ஆண்டு பல இன்னல்களுக்கு நடுவே, நான் போட்ட விதை. அது இந்த வருடம் பூர்வ ஜென்ம புண்ணியம் போல் பாராட்டுக்களைக் கொண்டுவந்து சேர்த்துக்கொண்டே இருக்கிறது. மனதை தாலாட்டும் மற்றுமொரு பாராட்டு. இத்திரைப்படம் 2020 டொரண்டோ உலகத்தமிழ் திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை வென்றது, எனக்குக் கிடைத்த மிகப்பெரும் பெருமை.

இப்படத்திற்கான எங்களது கடின உழைப்பை, அவர்கள் புரிந்துகொண்ட விதமும், படத்தை மதித்து, அங்கீகரித்த விதமும் எங்கள் குழுவுக்கு பெரும் வியப்பைத் தந்தது. மூன்று விருதுகளை எங்கள் படம் வென்றது மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இம்மாதிரியான பாராட்டுக்கள் தான் மேலும் மேலும் புதிய முயற்சிகளைச் செய்ய, எனக்கு பெரும் ஊக்கம் கொடுக்கிறது. டொரண்டோ உலகத் தமிழ்த்திரைப்பட விழா, ஜீரி உறுப்பினர்கள் அனைவருக்கும் இந்நேரத்தில் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த வருடம் எனது அடுத்த மாபெரும் முயற்சியாக ‘இரவின் நிழல்’ திரைப்படத்தைத் தொடங்கியுள்ளேன். இதற்கான பெருமையும், பாராட்டுகளும் அடுத்த வருடம் கிடைக்கும் என ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details