பாலிவுட்டில் எப்பொழுதும் பிஸியான நடிகையாக வலம் வருபவர் நடிகை ப்ரியங்கா சோப்ரா. இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஒயிட் டைகர்' திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.
ஆஸ்கர் ரேஸில் ப்ரியங்கா சோப்ரா! - Latest cinema news
நடிகை ப்ரியங்கா சோப்ரா 2021ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Priyanka chopra
ராமின் பஹ்ரானி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் நடிகை ப்ரியங்கா சோப்ரா இதுவரை யாருமே எதிர்பார்க்காத கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இத்திரைப்படம் மூலம் நடிகை ப்ரியங்கா சோப்ராவிற்கு ஆஸ்கர் விருது கிடைக்கலாம் என்று வெரைட்டி விருதுகள் சர்க்யூட் வலைதளப்பக்கம் தகவல் வெளியிட்டுள்ளது.