தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஆஸ்கர் விருதுகள் 2020 - வெற்றியாளர்கள் பட்டியல்

ஜோக்கர் , ஜூடி திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய வகீன் ஃபீனிக்ஸ் மற்றும் ரெனி ஸெல்வெஜெர் உலகம் முழுவதிலுமுள்ள சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்தவாறே சிறந்த நடிகர் மற்றும் சிறந்த நடிகைக்கான விருதுகளை வென்றனர். சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் உள்ளிட்ட நான்கு விருதுகளை அள்ளி பாராஸைட் திரைப்படம் இந்த வருடம் அதிக ஆஸ்கர் விருதுகள் குவித்த திரைப்படம் எனும் பெருமையை பெற்றுள்ளது.

Oscars 2020
Oscars 2020

By

Published : Feb 10, 2020, 2:52 PM IST

92ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸின் டால்பி திரையரங்கில் நடைபெற்று முடிந்துள்ளது. மொத்தம் உள்ள 24 பிரிவுகளில் விருதுகள் வென்ற திரைப்படங்கள், நடிகர், நடிகைகள், தொழிநுட்பக் கலைஞர்கள் பின்வருமாறு:

  1. சிறந்த நடிகர் : வகீன் ஃபீனிக்ஸ் (Joaquin Phoenix) (திரைப்படம் - ஜோக்கர்)
    சிறந்த நடிகர் வகீன் ஃபீனிகஸ்
  2. சிறந்த நடிகை - ரெனி ஸெல்வெஜெர் (Renee Zellweger ) (திரைப்படம் - ஜூடி)
    சிறந்த நடிகை ரெனி ஸெல்வெஜெர்
  3. சிறந்த துணை நடிகர் - ப்ராட் பிட் (Brad Pitt) (திரைப்படம் - ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்)
    சிறந்த துணை நடிகர் ப்ராட் பிட்
  4. சிறந்த துணை நடிகை - லாரா டெர்ன் (Laura Dern) (திரைப்படம் - மேரேஜ் ஸ்டோரி)
  5. சிறந்த திரைப்படம் - பாரஸைட் (Parasite)
  6. சிறந்த இயக்குநர் - போங் ஜூன் ஹோ (திரைப்படம் - பாராஸைட்)
    பாராஸைட் திரைப்படக் குழுவினர்
  7. சிறந்த ஆவண குறுந்திரைப்படம் - லெர்னிங் டு ஸ்கேட்போர்ட் இன் அ வார்ஸோன் (Learning to Skateboard in a Warzone)
  8. சிறந்த ஆவணப்படம் - அமெரிக்கன் ஃபேக்டரி
  9. சிறந்த ஆடை வடிவமைப்பு - ஜாக்லின் டர்ரன் (Jacqueline Durran) ( திரைப்படம் - லிட்டில் வுமன்)
  10. சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்
  11. சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் - த நெய்பர்ஸ்’ விண்டோ (The Neighbors' Window)
  12. சிறந்த இசை (ஒரிஜினல் சாங்) - லவ் மீ அகெய்ன் (திரைப்படம் - ராக்கெட் மேன்)
  13. சிறந்த தழுவப்பட்ட திரைக்கதை - டைகா வைடிட்டி (Taika Waititi) (திரைப்படம் - ஜோஜோ ரேபிட்)
    டைகா வைடிட்டி
  14. சிறந்த திரைக்கதை - போங் ஜூன் ஹோ (Bong Joon-ho) (திரைப்படம் - பாரஸைட்)
  15. சிறந்த அனிமேஷன் குறும்படம் - ஹேர் லவ்
  16. சிறந்த அனிமேஷன் திரைப்படம் - டாய் ஸ்டோரி 4
  17. சிறந்த எடிட்டிங் - ஃபோர்ட் Vs ஃபெராரி
  18. சிறந்த சவுண்ட் மிக்ஸிங் - 1917
  19. சிறந்த சவுண்ட் எடிட்டிங் - ஃபோர்ட் Vs ஃபெராரி
  20. சிறந்த ஒளிப்பதிவு - ரோஜர் டெக்கின்ஸ் (1917)
  21. சிறந்த VFX - 1917
  22. சிறந்த அலங்காரம் மற்றும் சிகையலங்காரம் - பாம்ப்ஷெல் திரைப்படம்
  23. சிறந்த இசை (ஒரிஜினல் ஸ்கோர்) - ஜோக்கர்
  24. சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் - பாராஸைட் (தென் கொரியா)

ABOUT THE AUTHOR

...view details