ஊரடங்கால் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துவருகிறார். அதுமட்டுமல்லாது சில அப்டேட்களும் தருகிறார். சமீபத்தில் டிஜிட்டல் இசைக்கோர்வைக்குப் பயன்படுத்தப்படும் 'லாஜிக் புரோ எக்ஸ்' என்ற மென்பொருளின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியானது.
இது பற்றி ஏ.ஆர். ரஹ்மான் தனது சமூக வலைதளப்பக்கமான இன்ஸ்டாகிராமில், "லாஜிக் புரோ எக்ஸ் பயனாளர்களே! 10.5 வெர்ஷனைப் பதிவிறக்கம் செய்துவிட்டீர்களா, அது எப்படி இருக்கிறது?" என்று ரசிகர்களிடம் கேட்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதற்கு ரசிகர்களும் இணையவாசிகளும் தங்களது கருத்தை கமெண்ட் செய்துவந்தனர். சிலர் லாஜிக் புரோ எக்ஸ் மென்பொருள் குறித்து சந்தேகங்களையும் கேட்டனர். அவர்களுக்கு ஏ.ஆர். ரஹ்மான் பதிலும் அளித்தார்.
இதற்கிடையில் ஒருவர் ஏ.ஆர். ரஹ்மானிடம், "இந்த மென்பொருளைப் பயன்படுத்த ஒரு ஆப்பிள் மேக்புக்கை நீங்கள் பரிசாக கொடுத்தால் நான் அப்டேட் செய்கிறேன்" என்று கமெண்ட் செய்திருந்தார்.