தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

காதலை மறைக்க முடியும்; மறக்க முடியாது - இயக்குநர் ஏ.எல். ராஜா - இயக்குநர் ஏ.எல். ராஜா படங்கள்

காதலை மையக்கருவாக வைத்து உருவாகியுள்ள 'ஒரு வினா ஒரு விடை' இசை ஆல்பத்தில் மாற்றுத்திறனாளி ஒருவரை நடிக்க வைத்துள்ளதாக இயக்குநர் ஏ.எல். ராஜா தெரிவித்துள்ளார்.

w
w

By

Published : Jul 13, 2021, 8:11 AM IST

சென்னை:'நினைக்காத நாளில்லை', 'தீக்குச்சி', 'அக்கி ரவ்வா' (தெலுங்கு) உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ஏ.எல். ராஜா, தனது நண்பர்களுக்காக 'ஒரு வினா, ஒரு விடை' என்ற ஆல்பத்தை தற்போது இயக்கியுள்ளார்.

இயக்குநர் ஏ.எல். ராஜா 'சின்ன மாப்பிள்ளை', 'மகாநதி', 'வியட்நாம் காலனி', 'செங்கோட்டை', 'கண்ணுபட போகுதயா' போன்ற திரைப்படங்களில் உதவி இயக்குநராகவும், இணை இயக்குநராகவும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.

'ஒரு வினா, ஒரு விடை' இசை ஆல்பம் குறித்து ராஜா கூறுகையில், "இசை அமைப்பாளர் ஆர்.எஸ் ரவிப்பிரியன், பாடலாசிரியர் செந்தமிழ் ஆகியோர் ஒரு பாடலை பதிவு செய்தனர்.

ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு பாடலை இயற்றி அதற்கான காட்சிகளை அமைக்க என்னை அவர்கள் அணுகினர். அவர்கள் என்னுடைய சிறந்த நண்பர்கள் என்பதால், நான் அந்த பணியை மேற்கொண்டு நிறைவு செய்துள்ளேன்.

இந்த பாடலின் தனித்தன்மை என்னவென்றால், நாயகன் ஸ்ரீஹரி பேசவும், கேட்கவும் முடியாத மாற்றுத்திறனாளி. ஸ்ரீஹரிமிகவும் திறமையானவர். ஏற்கெனவே ஒரு மலையாளப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவர் நடனமாடுவதிலும் வல்லவர்.

ஸ்ரீஹரி இந்தப் பாடலில் நன்றாகப் பொருந்துவார் என்பதில் நான் உறுதியாக இருந்தேன், அவரும் எனது கணிப்பை உண்மையாக்கியுள்ளார். தற்போது நான் இயக்கி வரும் 'சூரியனும் சூரியகாந்தியும்' படத்திற்குப் பிறகு இயக்கவிருக்கும் புதிய படத்தில் ஸ்ரீஹரியை கதாநாயகனாக நடிக்க வைக்க எண்ணியுள்ளேன்.

'சூரியனும் சூரியகாந்தியும்' படத்தில் வித்தார்த், அப்பு குட்டி, விக்ரம் சுந்தர், பிளாக் பாண்டி, சந்தானபாரதி முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கும் ஆர்.எஸ். ரவிப்பிரியன்தான் இசையமைக்கிறார்.

'ஒரு வினா, ஒரு விடை' பாடலின் மையக்கரு காதல்தான். காதலை மறைக்க முடியும், ஆனால் ஒருபோதும் மறக்க முடியாது. இதைதான் இந்த ஆல்பம் மூலம் தெரிவித்துள்ளோம். பாடலைப் பார்த்தவர்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்" என்றார்.

இதையும் படிங்க: வைரல் ஹிட்டடித்த ஹன்சிகாவின் இசை ஆல்பம்!

ABOUT THE AUTHOR

...view details