தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இசைக்கலைஞர்களுக்கு நிதியுதவி திரட்ட 'ஒரு குரலாய்' ஃபேஸ்புக் லைவ் - இசைக்கலைஞர்கள்

சென்னை: ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இசைக்கலைஞர்களுக்கு உதவும் வகையில் 'ஒரு குரலாய்' என்னும் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரு குரலாய்
ஒரு குரலாய்

By

Published : Sep 9, 2020, 4:23 PM IST

பிரபல பின்னணிப் பாடகர் ஸ்ரீனிவாஸ் உருவாக்கிய 'யுனைடெட் சிங்கர்ஸ் சாரிடபிள் ட்ரஸ்ட்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில், பாடகர்கள் உன்னி கிருஷ்ணன், சுஜாதா மோகன், ராகுல் நம்பியார், ரஞ்சித் கோவிந்த், ஹரிசரண், சைந்தவி ஆகியோர் அறங்காவலர்களாக உள்ளனர்.

ஊரடங்கு காலத்தில் இசைக்கலைஞர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்காக நிதிதிரட்டி உதவுவதற்காக இந்த டிரஸ்ட் மூலம் நிகழ்ச்சி நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்க முடிவு செய்யப்பட்டு அதற்காக 'ஒரு குரலாய்' எனும் 6 மணி நேர இன்னிசை நிகழ்ச்சியை ஃபேஸ்புக்கில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

செப்டம்பர் 12ஆம் தேதி ஃபேஸ்புக்கில் நேரலையாக நடைபெற உள்ள இந்த இசை நிகழ்ச்சியில், பிரபல பாடகர்கள், இசையமைப்பாளர்கள், திரையுலகப் பிரபலங்கள் பங்கேற்று பங்கேற்பாளர்களுடன் உரையாட உள்ளனர்.

ஒரு குரலாய்
அண்மையில் நடிகர்கள் விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோர் இந்த இசை நிகழ்ச்சியின் போஸ்டரை வெளியிட்டு, பாதிக்கப்பட்டுள்ள இசைக்கலைஞர்களுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்திருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details