தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 7, 2019, 4:47 PM IST

ETV Bharat / sitara

'நீங்கள் என்ன ரஜினியா?’ - ரசூல் பூக்குட்டியை சீண்டிய பிரசாத் பிரபாகரன்!

'நீங்கள் என்ன ரஜினியா அல்லது மம்முட்டியா? என கேட்டு ரசூல் பூக்குட்டியின் ஈகோவை தூண்டிவிட்டு நடிக்க வைத்தேன்' - 'ஒரு கதை சொல்லட்டுமா' படத்தின் இயக்குநர் பிரசாத் பிரபாகரன் மனம்திறந்த பேட்டி.

இயக்குநர் பிரசாத் பிரபாகரன்

பாலிவுட் திரை உலகில் முன்னணி சவுன்ட் இஞ்சினியராக வலம் வருபவர் ரசூல் பூக்குட்டி. இவர், ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக ஆஸ்கர் விருதை பெற்று உலக புகழ் பெற்றார். இந்தியாவே இவரை கொண்டாடி வருகிறது. இந்நிலையில், இயக்குநர் பிரசாத் பிரபாகரன் இயக்கியுள்ள 'ஒரு கதை சொல்லட்டுமா' என்ற படத்தின் மூலம் இவரை கதாநாயகனாக அறிமுகம் செய்துள்ளார்.

இயக்குநர் பிரசாத் பிரபாகரன்

கேரள மாநிலம் திருச்சூரில் வருடா வருடம் நடக்கும் பிரமாண்டமான பூரம் திருவிழாவை ஒளிப்பதிவு செய்யும் ஒரு சவுண்ட் இஞ்சினியரின் கதைதான் 'ஒரு கதை சொல்லட்டுமா'. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் ஆஸ்கர் விருதுக்காக இறுதிச் சுற்று வரை சென்று உலகின் 15 ஆயிரம் படங்களில் 347வது இடத்தினை பெற்றுள்ளது.

மேலும், ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டியை நடிகன் ஆக்கிய இயக்குநர் பிரசாத் பிரபாகரன் 'ஒரு கதை சொல்லட்டுமா' படத்தில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை நமது ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யக பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.

அவர் நினைவுகூர்ந்த நிகழ்வுகள் பின்வருமாறு,

நான் நன்றி சொல்ல வேண்டியது மக்களுக்குத்தான். இப்படம் தமிழகம் மட்டுமல்ல கேரளா, கர்நாடகா ஆகிய இடங்களில் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. ஒரு கதை சொல்லட்டுமா படத்திற்கு நீங்கள் அளித்துள்ள வரவேற்பிற்கு நன்றி.

இந்த படம் எடுக்க வேண்டும் என்று உங்களை தூண்டியது எது?

இந்த படத்தில் ரசூல் பூக்குட்டி ’ரசூல் பூக்குட்டி’யாகவே நடித்துள்ளார். 64 ஏக்கர் இடத்தில், 10 லட்சம் மக்கள் ,100 யானைகள், 500 செண்டா வாத்தியம். இந்த இடத்தில் நிறம், வாசம் எதுவுமே இல்லாமல் இந்த பூரம் விழா கொண்டாடுவதற்காக மக்கள் கூடுகின்றனர். இந்த மேஜிக்கை எப்படி பதிவு செய்ய வேண்டும் என்பதுதான் சவாலாகவே இருந்தது.

இதில், 8 கே முதல் 1 டி சி வரை உள்ள 24 கேமராக்களை பயன்படுத்தி உள்ளேன். ஒரு விழாவின் ஒலிப்பதிவை பதிவு செய்யும் பணியில் இருக்கும்போது ஒரு தடை வந்தால் அவர் என்ன செய்வார் என்பதுதான் கதை. இந்த படத்திற்கு ரீடேக் எதுவும் இல்லை.

ஒரு கதை சொல்லட்டுமா உங்களை கவர்ந்ததா?

ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் 64 ஏக்கர் இடத்தில் 10 லட்சம் மக்கள் கூடும் இடத்தில் 25 ஆயிரம் மக்கள் அனுமதிக்கும் நிலை பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு நடக்க வாய்ப்புகள் உள்ளது. 100 யானைகளுக்கு பதில் ஒரு அஞ்சு பத்து யானைகள் பயன்படுத்தலாம் செண்டை மேளம்களுக்கு பதில் டெக்னாலஜி அதிகரிக்கும். அதனால் நம் கலாச்சாரத்தை வரும் தலைமுறையினருக்கு தெரிவிக்கும் வகையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டது. தமிழக கலாசாரம், கேரள கலாசாரம் என்று தனியாக இல்லை அனைத்தும் சேர்ந்ததுதான் இந்திய கலாச்சாரம். நமது கலாச்சாரத்தை நாம் பாதுகாக்க வேண்டும்.

எந்த அனுபவமும் இல்லாத இயக்குநராக நீங்கள் சொல்ல விரும்புவது எது?

ஒரு விவசாயி மகனாக பிறந்து எந்த ஒரு சினிமா அனுபவம் இல்லாமல் ஒரு நல்ல படைப்பை அளித்தேன் என்ற மகிழ்ச்சி நெஞ்சில் நிறைவாக இருக்கு. சாதாரணமான ஒரு கலைஞனாக வாழ்ந்து இறந்து போவதை விட மக்களுக்கு பயன்படும் வகையில் ஒரு பதிவை செய்ய வேண்டும் என்று நினைத்தேன் அதுதான் இந்த படம்.

ரசூல் பூக்குட்டியை நடிகனாக மாத்தியது எப்படி?

80 சதவிகித படப்பிடிப்பு முடிந்த நிலையில் சில இடங்களில் படத்திற்கு ட்ராமா தேவைப்பட்டது. அதை அவரிடம் கூறினோம், ஆனால் அவர் நீ என்னை ஒரு கதாநாயகனாக எடுக்க முயற்சி செய்கிறாய் அது என்னுடைய தொழில் அல்ல எனக் கூறி மறுத்துவிட்டார். அப்பொழுது நான் அவருடைய ஈகோவை தூண்டி விட்டேன். 'நீங்கள் யார் ரஜினி அல்லது மம்முட்டி யா என்று கூறி மொக்கையாக நடிக்கிறீர்கள் என்று தூண்டிவிட்டு தான் இந்த படத்தை எடுத்து முடித்தேன்.

படத்தின் மூலம் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

செவி இரண்டுமே விழி ஆகுமே அதுதான் படத்தின் முக்கிய கருத்து. காதுகளில் கேட்கப்படுவது தான் காட்சியாக மாறுகிறது. அதனால் இந்த படத்தை பார்வையற்றவர்களுக்காக நான் சமர்ப்பிக்கிறேன் என அவர் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details