சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தெலுங்குத் திரையுலகில் பல நண்பர்கள் இருந்தாலும் அவர்களில் முக்கியமானவர் நடிகர் மோகன்பாபு. இவர்கள் இருவரின் நட்பு, திரையுலகமே அறிந்த ஒன்று. சமீபத்தில் 'அண்ணாத்தே' படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்ற ரஜினி, படப்பிடிப்பு முடிந்த பின் மோகன்பாபுவையும் அவரது குடும்பத்தினரையும் நேரில் சந்தித்துள்ளார்.
அசல் கேங்க்ஸ்டர்: வைரலாகும் ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்! - ரஜினியின் படங்கள்
சென்னை: நடிகர் ரஜனிகாந்த் தனது நண்பரும் நடிகருமான மோகன்பாபுவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
![அசல் கேங்க்ஸ்டர்: வைரலாகும் ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்! rajini](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11844636-470-11844636-1621594965373.jpg)
rajini
அப்போது மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு ரஜினினையும் மோகன்பாபுவையும் வைத்து போட்டோசூட் ஒன்றை நடத்தியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை விஷ்ணு தனது ட்விட்டர் பக்க்ததில் வெளிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படங்களுடன், "அசல் கேங்க்ஸ்டர்கள் ரஜினிகாந்த்-மோகன்பாபு இவர்களுடன் கோமாளித்தனமான விஷ்ணு மஞ்சு" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூகவைலதளங்களில் வைரலாகி வருகிறது.