தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தியேட்டர்களுக்கு தொடரும் தடை... சோகத்தில் தயாரிப்பாளர்கள்! - Forbidden to open theaters

தமிழ்நாட்டில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் திரையரங்குகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் தயாரிப்பாளர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

திரையரங்குகள்
திரையரங்குகள்

By

Published : Jul 16, 2021, 8:23 PM IST

தமிழ்நாட்டில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு வரும் 19ஆம் தேதியுடன் முடிவடையுள்ள நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் 31ஆம் தேதி வரை நீடித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதில் திரையரங்குகள் திறப்பதற்கான தடை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் தயாரிப்பாளர்கள் பலரும் சோகத்தில் மூழ்கி உள்ளனர். மேலும் திரையரங்குகள் திறக்கப்படாததால் பெரிய நடிகர்களின் படங்களை ரிலீஸ் செய்ய முடியாமல் படத்தின் தயாரிப்பாளர்கள் சோகத்தில் உள்ளனர்.

ஒரு பக்கம் தயாரிப்பாளர்கள் சோகமாக இருக்க, மற்றொருபுறம்தங்களின் ஹீரோக்களை திரையில் காண முடியவில்லை என ரசிகர்களும் ஏமாற்றத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதேபோல் அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள் ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

ABOUT THE AUTHOR

...view details