சென்னை:மக்களின் உரிமைகளை நிலைநாட்ட நாட்டில் பலர் அறப்போராட்டங்களில் ஈடுபடுவது வழக்கம். ஆனால், சில போலியான போராட்டங்களும் அவற்றில் நடைபெற்று வருகின்றன.
அப்படி ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து 'ஓங்காரம்' என்ற படம் தயாராகியுள்ளது.
அய்யன் மற்றும் சேதுபூமி படங்களை இயக்கிய ஏ.ஆர். கேந்திரன் முனியசாமி இப்படத்தை இயக்கியுள்ளார். போலி போராளிகளால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி இப்படம் பேசுகிறது.
நாயகனாக யுகேஷ், நாயகியாக வர்ஷா நடித்துள்ளனர். சாம் ரொனால்டு இப்படத்திற்கான ஒளிப்பதிவினையும் இசையினை பாரதியும் மேற்கொண்டுள்ளனர்.