தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'விக்ரம்' படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய கமல்ஹாசன்! - விக்ரம் படப்பிடிப்பு

'விக்ரம்' படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன் படக்குழுவினருடன் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.

Vikram
Vikram

By

Published : Nov 1, 2021, 7:19 PM IST

தமிழ் சினிமாவில் 'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்' என ஹாட்ரிக் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசனை வைத்து 'விக்ரம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இது கமல்ஹாசனின் 232ஆவது படமாகும்.

'விக்ரம்' படப்பிடிப்பு ஜூலை 16ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதில் கமலுடன் பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், ஷிவானி, காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

விக்ரம் படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, காரைக்குடி உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்று வருகிறது.

கமல்ஹாசன் நவம்பர் 7ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார். இந்நிலையில், முன்னதாக இன்று (நவம்பர் 1) 'விக்ரம்' படப்பிடிப்பில் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினருடன் கமல் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: காவல் அருங்காட்சியத்தில் கமலின் 'விக்ரம்' படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுப்பு

ABOUT THE AUTHOR

...view details