கே.எஸ். ரவிக்குமார் நடிகர் லாரன்ஸை வைத்து புதியப்படத்தை இயக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் லாரன்ஸ் இதுவரை ஏற்காத புது விதமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
நகைச்சுவை ஜனாரில் உருவாகவுள்ள இப்படத்தில், லாரன்ஸுடன் அவரது தம்பி எல்வினும் இணைந்து நடிக்கிறார். இப்படம் குறித்த அறிவிப்பு ராகவா லாரன்சின் பிறந்த நாளன இன்று (அக்.29) வெளியாகியுள்ளது.
இப்படத்தில் ராகவா லாரன்ஸுடன் நடிக்க உள்ள மற்ற நடிகர்கள், நடிகைகள் குறித்த தேர்வு நடைபெற்று வருகிறது. இப்படத்தை டிரைடென்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன், ஏ.ஆர்.என்டர்டெயின்மென்ட்டுடன் இணைந்து தயாரிக்கிறார்.
இப்படத்தில் பணியாற்றவுள்ள தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஹீரோவாகும் ‘தம்பி’... கோரிக்கை வைத்துள்ள ‘அண்ணன்’ ராகவா லாரன்ஸ்