தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிப் படங்களில் வில்லனாகவும், துணை வேடங்களிலும் நடித்து அசத்தியவர் சோனு சூட். இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி ஏழை, எளிய மக்களுக்கு அவ்வப்போது உதவி செய்து வருகிறார்.
3 லட்சம் வேலை வாய்ப்பை உருவாக்கிய சோனு சூட்! - புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
நடிகர் சோனு சூட் தனது பிறந்தநாளை முன்னிட்டு குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்காக மூன்று லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி அசத்தியுள்ளார்.
அதற்குச் சரியான உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், கரோனா ஊரடங்கு காலத்தில் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல, களத்தில் இறங்கி உதவி செய்தார். அதோடு வேலையில்லாமல் தவிக்கும் குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்காக தனது சொந்தச் செலவில், 'பிரவாசி ரோஜ்கர்' என்ற புதிய செயலியை உருவாக்கியுள்ளார்.
இச்செயலியின் மூலம் மூன்று லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளார். நடிகர் சோனுசூட் இன்று (ஜூலை 30) தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதையொட்டியே இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.