ஒமைக்ரான் வகை கரோனா வைரஸால் உலகின் பல நாடுகளும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் உயிரிழப்புகள் நிகழ்ந்தபடியே உள்ளன.
இந்நிலையில் 1963ஆம் ஆண்டிலேயே தி ஒமைக்ரான் வேரியன்ட் (the omicron variant) எனும் வைரஸ் பாதிப்பு குறித்து பேசும் திரைப்படம் இத்தாலியில் எடுக்கப்பட்டது எனும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த பெயரிலான படத்தின் போஸ்டரும் சமூக வலைதளங்களில் பலராலும் பதிவிடப்பட்டது. தற்போது அது தவறு எனும் தகவல் தெரியவந்துள்ளது.