தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ரிலீஸுக்கு தயாராகும் 'நிக்கி கல்ராணி'யின் 'தமாக்கா' - டார்லிங் திரைப்பட நடிகை நிக்கி கல்ராணி

டார்லிங் திரைப்பட நடிகை நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகிவரும் 'தமாக்கா' என்ற மலையாளப் படத்தின் வெளியீடு பற்றிய புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Nikki Galrani

By

Published : Oct 31, 2019, 11:11 AM IST

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், மரகத நாணயம், கலகலப்பு 2, சார்லி சாப்ளின் 2 உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள இவர், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற, ஒரு அடார் லவ் திரைப்படத்தின் இயக்குநர் ஓமர் லுலு இயக்கும் 'தமாக்கா' படத்தில் நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.

தமாக்கா படத்தில் நிக்கி

முழுநீள காமெடி படமாக உருவாகிவரும் இந்தப் படத்தில், அருண், முகேஷ், ஊர்வசி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.

குட் லைன் புரோடக்‌ஷன் நிறுவனம் சார்பில் எம்.கே. நாசர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தை விரைவில் வெளியிட படக்குழு தயாராகிவருகிறது.

மாடல் உடையில் கலக்கும் நிக்கி

நிக்கி கல்ராணி தற்போது தமிழில் சசிகுமாருக்கு ஜோடியாக ராஜவம்சம் திரைப்படத்திலும், மலையாளத்தில் இதிஹாசா 2 படத்திலும் நடித்து வருகிறார்.

ராஜவம்சம் படத்தில் நிக்கி

சமீபத்தில் பிரபுதேவாவுடன் இவர் நடித்த சார்லி சாப்ளின் 2 திரைப்படம், மாபெரும் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...

சூப்பர் ஸ்டார் வெளியிட்ட 'அந்தநாள்' ஃபஸ்ட் லுக்!

ABOUT THE AUTHOR

...view details