திரையுலகில் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் பெரும் வெற்றிதரும் படைப்புகளாக மாறியுள்ளன. அரசியல், சினிமா, விளையாட்டு ஆகியவற்றில் சாதனை படைத்தவர்களின் வாழ்க்கை, திரைப்படங்களாக உருவாக்கி வருகின்ற இந்த சூழ்நிலையில் பளுதூக்கும் போட்டியில் உலக சாதனைகள் பல புரிந்து ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற “கர்ணம் மல்லேஸ்வரி”யின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகவுள்ளது.
இந்திய பெண்களுக்கு மிகப்பெரும் முன்னுதாரணமாக விளங்கும் கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை கதை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகிறது.
திரைப்படமாகிறது“கர்ணம் மல்லேஸ்வரி” வாழ்க்கை வரலாறு - கர்ணம் மல்லேஸ்வரி
சென்னை: இந்திய பெண்களுக்கு மிகப்பெரும் முன்னுதாரணமாக விளங்கும் கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை கதை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரைப்படமாக உருவாகிறது.
மல்லேஸ்வரி
கோனா பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் தயாராகும் இந்த படத்தை இயக்குநர் சஞ்சனா ரெட்டி இயக்க உள்ளார். படத்தின் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகராப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.