கடந்த சில வருடங்களாக, வொண்டர் வுமன், கேப்டன் மார்வெல் என பெண் மையக் கதாப்பாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட சூப்பர் ஹீரோ படங்களை டிசியும் மார்வெலும் போட்டி போட்டு வெளியிட்டு வருகின்றன. அந்த வரிசையில், தற்போது 'ஸ்பைடர்-வுமன்' குறித்த திரைப்படத்திற்கான பணிகளில் மார்வெல் இறங்கியுள்ளது.
மார்வெல் காமிக்ஸ் திரைப்படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒலிவியா வைல்ட்! - ஸ்பைடர் வுமன்
வாஷிங்டன் : நடிகை ஒலிவியா வைல்ட், பெயரிடப்படாத மார்வல் திரைப்படம் ஒன்றை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஸ்பைடர் மேன் சீரிஸின் பிரபல கதாபாத்திரங்களான ஜெசிகா ட்ரூ, மேரி-ஜேன் வாட்சன், க்வென் ஸ்டேசி ஆகியோரில் ஒருவரை மையப்படுத்தி இந்த 'ஸ்பைடர்-வுமன்' குறித்த திரைப்படத்தின் கதை அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனை சோனி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. நடிகையும் திரைப்பட இயக்குநருமான ஒலிவியா வைல்ட் இப்படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
'புக்ஸ்மார்ட்' திரைப்படத்திற்கு கதை எழுதிய கேட்டி சில்பர்மேன் இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். ஆமி பாஸ்கல், ரேச்சல் ஓ கானர் ஆகியோர் தயாரிக்க உள்ளனர்.