தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஸ்ரேயா கோஷல் காலில் விழுந்த மூதாட்டி - வைரல் வீடியோ - ஸ்ரேயா கோஷல்

மூதாட்டி ஒருவர் மேடையில் பிரபல பின்னணிப்பாடகி ஸ்ரேயா கோஷலின் காலில் விழுந்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஸ்ரேயா கோஷல் காலில் விழுந்த மூதாட்டி!
ஸ்ரேயா கோஷல் காலில் விழுந்த மூதாட்டி!

By

Published : Jan 28, 2020, 8:45 AM IST

ஹிந்தியில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான தேவதாஸ் படத்தில் 'பைரி பியா' என்ற பாடலைப் பாடி பிரபலமானவர், ஸ்ரேயா கோஷல். இதையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று ஏராளமான மொழிகளில் பாடல்களைப் பாடிவருகிறார்.

தனது இனிமையான குரல் மூலம் ஏகப்பட்ட பாடல்களைப் பாடி ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். இவரின் குரலுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் உள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் ஸ்ரேயா கோஷல் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது மூதாட்டி ஒருவர் மேடைக்கு வந்து, ஸ்ரேயா கோஷலுக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

பின்பு திடீரென்று அந்த மூதாட்டி, ஸ்ரேயா கோஷல் காலில் விழா, உடனே அவர் சற்று பின்வாங்கினார். இதையடுத்து , ஸ்ரேயா கோஷல் அவரைக் கட்டிப்பிடித்து அன்பைப் பரிமாறிக்கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:பிக்பாஸ் பிரபலம் முகின் ராவின் தந்தை காலமானார்!

ABOUT THE AUTHOR

...view details