தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஓ மணப்பெண்ணே ரிலீஸ் தேதி வெளியீடு - ஓ மணப்பெண்ணே

நடிகர் ஹரீஷ் கல்யாண் நடித்துள்ள, 'ஓ மணப்பெண்ணே' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஓ மணப்பெண்ணே
ஓ மணப்பெண்ணே

By

Published : Oct 11, 2021, 3:56 PM IST

தெலுங்கில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம், பெல்லி சூப்பலு. விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்தப் படத்தை தமிழில் கார்த்திக் சுந்தர், 'ஓ மணப்பெண்ணே' என்ற பெயரில் இயக்கியுள்ளார். ஹரீஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடித்துள்ளார்.

ஓ மணப்பெண்ணே

இப்படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், ரிலீஸ் தேதி மட்டும் அறிவிக்காமலிருந்தது.

இந்நிலையில் 'ஓ மணப்பெண்ணே' திரைப்படம் வரும் 22 ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

ஏற்கெனவே ஹரீஷ் கல்யாணின் கசட தபற படம் ஓடிடி தளத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பொதுவெளியில் நடிகரின் கையைக் கடித்த நடிகை

ABOUT THE AUTHOR

...view details