தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'தெகிடி' அசோக் குமாரின் 'ஓ மை கடவுளே' டீசர் வெளியீட்டு அப்டேட்! - வாணி போஜன் புதிய படம்

சின்னத்திரை தொடர்களின் மூலம் தமிழ் மக்களிடையே நீங்கா இடம் பிடித்தவர் வாணிபோஜன். இவர் இப்போது சின்னத்திரை மட்டுமல்லாது வெள்ளித்திரையிலும் கால் பதித்துள்ளார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் உருவாகி வரும், 'மீக்கு மாத்ரமே செப்தா' படத்தில் நடித்து வருகிறார்.

omk

By

Published : Oct 17, 2019, 12:58 PM IST

சின்னத்திரை தொடர்களின் மூலம் தமிழ் மக்களிடையே நீங்கா இடம் பிடித்தவர் வாணிபோஜன். இவர் இப்போது சின்னத்திரை மட்டுமல்லாது வெள்ளித்திரையிலும் கால் பதித்துள்ளார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் உருவாகி வரும், 'மீக்கு மாத்ரமே செப்தா' படத்தில் நடித்து வருகிறார்.

அதேபோல் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் அசோக் குமார், 'இறுதிச்சுற்று' நாயகி ரித்திகா சிங் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஓ மை கடவுளே (Oh My கடவுளே)' ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வரும், இப்படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். ரொமான்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி, வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியது.

நேற்று இப்படத்தில் வாணி போஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருந்தது. தற்போது இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்றும் வரும் நிலையில் இன்று 'ஓ மை கடவுளே' இப்படத்தின் டீசர் வெளியாகயுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் வாசிங்க: விஜய் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் சின்னத்திரை நயன்தாரா!

ABOUT THE AUTHOR

...view details