தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஒருவழியாக நிறைவடைந்தது 'ஓ மை கடவுளே' - அசோக் செல்வன் நடிக்கும் ஓ மை கடவுளே படப்பிடிப்பு நிறைவு

அசோக் செல்வன், ரித்விகா சிங், வாணி போஜன் நடிப்பில் வரவிருக்கும் 'ஓ மை கடவுளே' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. இயக்குநர் அஸ்வத் இயக்கியிருக்கும் இப்படத்தினை டில்லிபாபு தயாரிக்கிறார்.

Oh My Kadavule movie shoot complete

By

Published : Nov 2, 2019, 1:54 PM IST

ஆக்சஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் நகைச்சுவை கலந்த ரொமான்ஸ் படமாக தயாராகிவருகிறது 'ஓ மை கடவுளே' திரைப்படம். அசோக் செல்வன், ரித்விகா சிங் நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்திருக்கிறது.

இது குறித்து தயாரிப்பாளர் டில்லிபாபு, படப்பிடிப்பு நிறைவடைந்ததால் உற்சாகத்தில் இருப்பதாகத் தெரிவித்தார். இது தங்களது முதல் தயாரிப்பு என்பதால் எல்லாம் கனவுபோல் இருக்கிறது என்று கூறிய அவர், இயக்குநர் அஸ்வத்தின் புதுமையான கதையை படமாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அசோக் செல்வன், ரித்விகா சிங், வாணி போஜன் என அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்துள்ளதாகவும் டில்லிபாபு கூறினார்.

அசோக் செல்வன், ரித்விகா சிங்

இப்படம் இளைஞர்களை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரையும் கவரும்வகையில் இருக்கும் என்று தொடர்ந்த டில்லிபாபு, படத்தின் தொழில்நுட்பக் குழு மிகக் குறுகிய காலத்தில் படப்பிடிப்பை சிறப்பாகச் செய்திருக்கின்றதாகவும் பாடல், முன்னோட்டம் வெளியிடும் தேதி திரைக்கு வெகு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: பரியேறும் பெருமாளின் 'சர்பத்' - டீசர் வெளியீடு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details