சுகுமார் இயக்கத்தில் உருவாகும் 'புஷ்பா' படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடித்துவருகிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் வில்லனாக ஃபகத் பாசிலும் நடித்துவருகிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் அல்லு அர்ஜுன் கதாபாத்திரமான 'புஷ்பா ராஜ் அறிமுகம்' டீசர், இதுவரை இணையத்தில் அதிகமானோர் பார்த்த டீசர் என்ற சாதனையைப் படைத்துள்ளது.
இரண்டு பாகங்களாக வெளியாகும் ’புஷ்பா’ படத்தின், முதல் பாகம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.