தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'சைரா'வின் புகழ் பாடும் லேடி சூப்பர் ஸ்டார் 'பாகுபலி' அவந்திகா! - தமன்னா

'சைரா நரசிம்மா ரெட்டி'யின் ஆரம்ப பாடலின் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

syraa

By

Published : Sep 30, 2019, 7:18 PM IST

சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா, தமன்னா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் 'சைரா நரசிம்மா ரெட்டி'. இதில் விஜய் சேதுபதி, கிச்சா சுதீப், ஜகபதி பாபு, அனுஷ்கா, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதி "ராஜபாண்டி" என்னும் தமிழ் மன்னனின் கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார். சுதந்திரப் போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சன்றிதழ் வழங்கியுள்ளது.

சமீபத்தில் படத்தின் தொடக்க பாடலான "ஓ...சைரா.." பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படத்தின் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் சைரா நரசிம்ம ரெட்டியின் புகழை நயன்தாராவும் தமன்னாவும் பாடுவது போல் காட்சி படுத்தியுள்ளனர். இதன் வீடியோ வெளியான சிலமணி நேரங்களிலேயே சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க:காமசூத்ரா தொடரில் சன்னி லியோன்? - ரசிகர்கள் குஷி

ABOUT THE AUTHOR

...view details