தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

#Verithanam: இணையமே தயாராக இரு 'வெறித்தனம்' ஆக வரும் 'பிகில்'...!

'பிகில்' படத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையில் நடிகர் விஜய் பாடியுள்ள வெறித்தனம் பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

By

Published : Aug 31, 2019, 10:47 PM IST

Bigil

'தெறி', 'மெர்சல்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் - அட்லி கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் 'பிகில்'. பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும், இப்படத்தில் விஜய் பயிற்சியாளராக நடிக்கிறார். விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் இந்துஜா, யோகி பாபு, கதிர், ஷாக்கி ஷெராஃப், விவேக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

பெரும் பொருட்செலவில் ஏ.ஜி.எஸ்.எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இவ்வருட தீபாவளிக்கு பிகில் வெளியாகவுள்ளது.

'பிகில்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வந்த நிலையில், அப்படத்தின் தற்போதைய அப்டேட் செய்திகள் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தி இருக்கிறது.

இப்படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான ”சிங்கப்பெண்ணே” பாடல் பெண்களை பெருமைப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது.

இதனையடுத்து இப்படத்தின் அடுத்த படலான வெறித்தனம்பாடல் நாளை வெளியாக உள்ளதாக படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அதில் ”ட்விட்டர், யூடியூப் தயாராக இருங்கள். நாளை அனைத்து சாதனையையும் வெறித்தனம் பாடல் முறியடிக்கும்" என்று பதிவிட்டுள்ளார். "நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் நம்ம ஜனம் வெறித்தனம்" என்று தொடங்கும் பாட்டின் வரியை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

இதனையடுத்து ரசிகர்கள் ட்விட்டரில் #Verithanam என்ற ஹேஷ்டேக்கை ட்ரண்ட் செய்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details