தமிழ்நாடு

tamil nadu

லண்டனில் தொடங்கிய 'துப்பறிவாளன் 2' ஷுட்டிங்

By

Published : Nov 4, 2019, 12:27 PM IST

Updated : Nov 9, 2019, 4:27 PM IST

நாய் ஒன்று இறந்ததன் மர்மத்தை கண்டுபிடிக்க களமிறங்கும் துப்பறிவாளன் கணியன் பூங்குன்றன், அதன் பின்னணியில் இருக்கும் ஒரு கேங்கை அவர்களின் பித்தலாட்டங்களையும் சஸ்பென்ஸோடு எட்ஜ் சீட் த்ரில்லராக விவரித்த படம் 'துப்பறிவாளன்'. ஹாலிவுட்டின் 'ஷெர்லாக் ஹோம்ஸ்' படத்துக்கு நன்றி கார்டு போட்டு தொடங்கிய இப்படம் சமீபத்தில் வெளியான சூப்பர் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக அமைந்திருந்தது. இப்போது இதே பாணியில் மாறுபட்ட கதைக்களத்தில் 'துப்பறிவாளன் 2' தொடங்கியுள்ளது.

துப்பறிவாளன் படத்தில் விஷால்

சென்னை: விஷால் - மிஷ்கின் கூட்டணியில் 'துப்பறிவாளன் 2' படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியுள்ளது.

2017ஆம் ஆண்டு சஸ்பென்ஸ் கலந்த ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்ற படம் 'துப்பறிவாளன்'. படத்தில் கணியன் பூங்குன்றன் என்ற கேரக்டரில் டிடெக்டிவாக நடித்திருப்பார் நடிகர் விஷால். படத்தை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்திருந்த நிலையில், மிஷ்கின் இயக்கியிருந்தார்.

இதையடுத்து 'துப்பறிவாளன்' படத்தின் இரண்டாம் பாகமாக 'துப்பறிவாளன் 2' குறித்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தையும் விஷால் தயாரிக்க மீண்டும் இயக்குநர் மிஷ்கினே இதனை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

விஷால் கதாநாயகனாக நடிக்க, அக்‌ஷரா ஹாசன், புதுமுகம் ஆஷ்யா, நாசர், ரஹ்மான், பிரசன்னா, கெளதமி, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

துப்பறிவாளன் 2' படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தற்போது தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக அங்கு 40 நாள்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் தொடங்கிய 'துப்பறிவாளன் 2' ஷுட்டிங்

தனது செல்லநாய் இறந்ததன் மர்மத்தை கண்டுபிடிக்குமாறு துப்பறிவாளனான தன்னை நாடிய சிறுவனுக்கு உதவ முற்படும் கணியன் பூங்குன்றன், அதன் பின்னணியில் இருக்கும் கேங்கும், அவர்களின் பித்தலாட்டங்களும் என விரியும் விதமாக அமைந்திருந்த துப்பறிவாளன் படம் ரசிகர்களுக்கு சிறந்த சீட் எட்ஜ் த்ரில்லராக புதிய அனுபவத்தை தந்தது. இந்தப் படம் ஹாலிவுட் சூப்பர் ஹிட் படமான ஷேர்லாக் ஹோம்ஸ் கதாபாத்திர பாணியில் அமைந்திருப்பதாகக் கூறி நன்றி கார்டு படத்தின் தொடக்கத்தில் போடப்பட்டது.

இதையடுத்து இதன் இரண்டாம் பாகம் அறிவிப்புக்கு பின்னர், இயக்குநர் மிஷ்கின் லண்டனிலுள்ள ஷெர்லாக் ஹோமஸ் அருங்காட்சியகத்துக்குச் சென்று சில ரெபரன்ஸ் மேற்கொண்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களும் வெளியானது. அந்த வகையில் முதல் பாகத்தின் பாணியில் துப்பறிவாளன் 2 ரசிகர்களுக்கு புதுவித சர்ப்ரைஸ் அளிக்கலாம்.

Last Updated : Nov 9, 2019, 4:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details